இயக்குனர் கொரடாலா சிவா இயக்கத்தில் உருவான படம் ‘ஆச்சார்யா’.
இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான கொரடாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த படம் ‘ஆச்சார்யா’. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே ராம்சரண் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்து வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர்.
ஆச்சார்யா
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாக சிரஞ்சீவியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ”ஆச்சார்யா படம் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். படம் நஷ்டமானதையடுத்து நானும், ராம்சரணும் 80 சதவீத பணத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துவிட்டோம். ஆச்சார்யா படம் குறித்த எந்த குற்றவுணர்வும் எனக்கில்லை” என தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி
மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘காட்ஃபாதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.