Loading...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Loading...
மேலும் இதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சருக்கு வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களாவார்.
Loading...