- ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன்.
- இந்த மந்திரத்தை 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும்.
திங்கட்கிழமை அம்பாளின் வழிபாட்டுக்கு உகந்த தினம் மட்டுமல்லாமல் சந்திரனின் வழிபாட்டுக்கும் மிகவும் உகந்த தினம். அதனால் திங்கட்கிழமைகளில் சந்திரனுக்குரிய இந்த மந்திரத்தை ஒவ்வொரு வாரமும் மறக்காமல் 11 முறை ஜெபித்து வந்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும்.
திங்கட்கிழமைகளில் மட்டுமல்லாமல் பெளர்ணமி, வளர்பிறை தினங்கள், மூன்றாம் பிறை போன்ற சந்திரனுக்கு விசேஷமான தினங்களிலும் சொல்லி வரலாம். அப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் சந்திரனுக்குரிய தோஷங்கள் எல்லாம் விலகி ஓடும்.
திங்கட்கிழமைகளில் சொல்ல வேண்டிய சந்திரன் ஸ்லோகம்
‘பத்ம த்வாஜய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
ஸ்ரீ வேங்கடலாசலபதி தந்நஸ் ஸோம ப்ரசோதயாத்’
இந்த மந்திரத்தை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் கை, கால்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, பூஜை அறையில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி,வானில் சந்திரனைப் பார்த்து விட்டு, பின்னர் உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிக்கும் முன்பாக அகல் விளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை நெல் பரப்பி அதன்மீது வைக்க வேண்டும். பின்னர் வெண்பொங்கல் நைவேத்தியம் படைத்து, 108 எண்ணிக்கையில் மல்லிகை பூவைக் கொண்டு வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து, சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
ஒவ்வொருவருக்குமே அவரவர் ஜாதகத்தில் தாய் ஸ்தானத்திற்குரியவர் சந்திரன். எனவே தாயின் சாபம் பெற்றவர்கள், தாயை நல்ல முறையில் பேணி பாதுகாக்காதவர்கள், அவசியம் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் விரதம் இருந்து சந்திரனை வழிபடுவது நல்ல பலன்களை அள்ளி தரும்.