- கடையில் வாங்கும் தட்டையை விட வீட்டிலேயே சுவையாக செய்யலாம்.
- இந்த தீபாவளிக்கு கார தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 2 கப் அளவு
உளுத்தம் பருப்பு – 1/4 கப் (வறுத்து அரைத்தது)
பொட்டுக்கடலை மாவு – 1/4 கப்
கடலை பருப்பு – 4 டீஸ்பூன்
கொரகொரப்பாக பொடித்த பூண்டு – 10
கறிவேப்பிலை – தேவையான அளவு
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
2 கப் அளவு பச்சரிசியை, ஒரு கடாயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். ஈரப்பதம் மாவில் இருக்கவே கூடாது. வறுத்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.
கடலை பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த அரைத்த உளுத்த மாவு, பச்சரிசி மாவை போட்டு நன்றாக கலந்துகொள்ளவும்.
அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயம், கறிவேப்பில்லை, கொரகொரப்பாக பொடித்த பூண்டு மற்றும் ஊறவைத்த கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
தண்ணீர் மற்றும் சிறிது சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மாவை பிசைந்து கொள்ளவும். தட்டை மாவு தயார்.
இப்போது தயாரித்து வைத்துள்ள மாவை உருண்டை பிடித்து அதனை உள்ளங்கையில் வைத்து தட்டைபோல் அமுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்த தட்டைகளை போட்டு பொரிக்கவும். இரண்டு புறமும் நன்கு பொரிந்த பின்பு அதனை எடுத்து சிறிது நேரம் எண்ணெய் வடிய வைத்து எடுத்தால், சுவையான மற்றும் காரமான தட்டை தயார்.