Loading...
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ‘நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். சிறைக்குச் செல்ல வேண்டியவர்கள் சென்றிருக்கிறார்கள்.
ஜெயலலிதா எப்போதுமே, இவர்களுக்கு பதவி அளிக்கவில்லை. முக்கியமாக அவர்களை ஜெயலலிதா எப்போதும் விரும்பியதும் இல்லை.
தொடர்ந்து 30 ஆண்டுகள், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து கொண்டிருந்தவர்கள் சிறைக்குச் செல்ல உள்ளனர்.
Loading...
சசிகலா குடும்பத்துக்கு யார் தேவையோ, அவர்களுக்கு பதவி அளிக்கின்றனர்.
எனக்கு அழைப்பு விடுத்த முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நன்றி.
எங்களது முடிவு குறித்து, விரைவில் அறிவிப்போம் என்றார்.
Loading...