தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா.
இவர் தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் வந்த அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் உருவான நோட்டா, டியர் காமரேட் போன்ற படங்கள் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தெலுங்கில் குஷி, ஜனகன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் தேவரகொண்டா – சிவகார்த்திகேயன்
இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது, ”விஜய்தேவரகொண்டா ப்ரின்ஸ் போல இருக்கிறார். மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். இந்தியா முழுவதும் அனைவரும் அறியும் வகையில் பான் இந்தியா நடிகராகிவிட்டார். விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது” என்றார் கூறினார்.