ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதிபுருஷ்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்றது.
ஆதிபுருஷ் படத்திற்கு பிறகு தன்னுடைய சினிமா வாழ்க்கையை வர்த்தக ரீதியாக உயர்த்த முடியும் என்று பிரபாஸ் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்ஷனாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை பலர் பதிவு செய்தனர். இந்த படத்தின் அனிமேஷன் தரம் ஈர்க்கும் வகையில் இல்லை என கூறியுள்ளனர். மேலும் ராமர் கோவில் தலைமை குருக்களும் கடுமையான விமர்சனத்தை வைத்தது படக்குழுவுக்கு ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.
இது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் ஓம் ராவத்திற்கு தயாரிப்பாளர் பூஷன் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இதன் மூலம் தங்களுக்கு எந்தவிதமான கருத்து மோதலும் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.