Loading...
நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.
நிலக்கரி கொள்வனவு
குறித்த கப்பல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நிலக்கரி கொள்வனவு தொடர்பில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
Loading...
தரையிறக்கும் பணிகள்
நிலக்கரி கப்பலானது எதிர்வரும் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்ததை தொடர்ந்து, தரையிறக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
அத்துடன், நிலக்கரி கிடைக்கப்பெற்றதும் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுக்க முடியும்”என தெரிவித்துள்ளார்.
Loading...