யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் உயிர்கொல்லிப் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மீதான வன்புணர்வுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயார் உடந்தை
சிறுமி மீதான தொடர் வன்புணர்வு தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாகவே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
சிறுமியின் தாயாரும், 41 வயதான சந்தேகநபரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சிறுமியை சந்தேகநபர் நீண்ட காலமாக வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.