பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து அசல் கோளார் கோளாறு பண்ணிக் கொண்டு இருப்பதாக நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
ஜோர்த்தால பாடல் மூலம் பிரபலமானவர் அசல் கோளார்.
இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக வந்த அவரிடம் பல கானா பாடல்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால், அவரிடம் இருந்து ஏகப்பட்ட லீலைகள் தான் தினந்தோறும் வந்து கொண்டே இருப்பதால் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
அத்துமீறி விளையாடும் அசல் கோளார்!
பெண் போட்டியாளர்களின் கைகளையும், கால் முட்டி பகுதிகளையும் முதுகு பகுதியையும் தடவுறதே வேலையாக கொண்டிருக்கிறார்.
தினமும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களிடம் அசல் கோளார் அத்துமீறி வருகிறார்.
தற்போது இலங்கை பெண் ஜனனியின் முதுகில் அசல் கோளார் கோலம் போட்டுள்ளார் என புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி அவரை கிழித்துதொங்க விட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படம் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.