மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கு மாதந்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன், 24ஆம் திகதி சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை
ஆனால் இந்த ஆண்டு 24 ஆம் திகதி தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும் இன்றைக்குள் சம்பளம் வைப்பிலிடப்பட வேண்டும்.
ஆனால் நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு திறைசேரியில் இருந்து பணம் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமையை கருத்திற்கொண்டு, நிதியமைச்சின் ஒதுக்கீட்டைப் பெற்று, ஒக்டோபர் மாத சம்பளப் பத்திரங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி அதாவது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வங்கியில் வழங்க மாகாண செயலகங்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.