Loading...
எயார் பிரான்ஸ் மற்றும் றோயல் டச் ஏயார்லைன்ஸ் ஆகியவை அடுத்த மாதம் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன.
நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு விமானங்களை இலங்கைக்கான சேவையில் ஈடுபடுத்தும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...
ரஷ்யா மற்றும் இந்திய உள்ளிட்ட பல நிறுவனங்களும் கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கவும் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளன.
கொரோனா தொற்று காரணமாகவும், சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பல நாடுகளுக்கான விமான சேவைகள் தடைபட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...