சாம்சங் நிறுவனம் முற்றிலும் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிசை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
புதிய பிளாக்ஷிப் சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனதிதின் கேலக்ஸி S23 சீரிஸ் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த வார துவக்கத்தில் கேலக்ஸி S23 அமெரிக்க வேரியண்ட் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது. தற்போது கேலக்ஸி S23 அல்ட்ரா விவரங்கள் பென்ச்மார்க்கிங் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் SM-S918U எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
இந்த மாடல் நம்பரில் இடம்பெற்று இருக்கும் U – அல்ட்ரா பிராண்டிங்கை குறிப்பதாக கூறப்படுகிறது. பெயர் மட்டுமின்றி இதன் அம்சங்கள் பற்றிய விவரங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாத வாக்கில் கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் செய்யப்படலாம். எனினும், இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் ஏற்கனவே வெளியாக துவங்கி விட்டன.
கீக்பென்ச் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கும் இரண்டாவது கேலக்ஸி S23 சீரிஸ் மாடலாக S23 அல்ட்ரா இடம்பெற்றுள்ளது. இதில் வழங்கப்பட இருக்கும் மதர்போர்டு “கலமா” எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸரை குறிக்கிறது. இத்துடன் அட்ரினோ 740 GPU, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.
பென்ச்மார்க் சோதனைகளில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் சிங்கில் கோர் மற்றும் மல்டி கோர் சோதனைகளில் முறையே 1521 மற்றும் 4689 புள்ளிகளை பெற்று இருக்கிறது. முன்னதாக கேலக்ஸி S23 ஸ்டாண்டர்டு வேரியண்ட் முறையே 1524 மற்றும் 4597 புள்ளிகளை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவைதவிர ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி வேறு எந்த தகவலும் கீக்பென்ச் தளத்தில் இடம்பெறவில்லை.
முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் அதிகபட்சம் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. டிசைனை பொருத்தவரை இந்த மாடலில் வெறு எந்த மாற்றமும் இடம்பெறாது என்றே தெரிகிறது.