Loading...
நாட்டில் சுமார் 18,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட காரணத்தினால் இவ்வாறு 18,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளனர்.
புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படப் போவதில்லை
இவ்வாறு ஓய்வு பெற்றுக் கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கு பதிலீடாக புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படப் போவதில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
கடந்த 2021ம் ஆண்டில் 2,700 புதிய உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
எனினும், இந்த ஆண்டில் எந்தவொரு உத்தியோகத்தரும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...