உத்தேச புனர்வாழ்வு சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் 2010ஆம் ஆண்டே ஆரம்பமாகியிருந்தன. குறிப்பாக எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பது இதன் நோக்கமாக இருந்தது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது, புனர்வாழ்வுப் பணிகளை செய்து வருகிறோம். கந்தகாடு பகுதியிலும் ஏராளமானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற இன்னும் பல இடங்கள் உள்ளன, ஆனால் சிலர் கைதிகளாக செல்கின்றனர்.
எனவே, இதுபோன்ற சட்டம் கொண்டு வருவதற்கு சில யோசனைகளும் எதிர்ப்புகளும் இருந்தன. இவ்வாறான செயற்பாடுகளை முறைப்படுத்துவது மற்றும் மறுவாழ்வுக்கான சட்டபூர்வ பொறிமுறையை உருவாக்குவதே இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும்.
நீதிமன்ற உத்தரவில்லாமல் புனர்வாழ்விற்கு அழைத்துச் செல்ல எந்த ஏற்பாடும் இல்லை
இரண்டாவது விடயம் என்னவெனில், போதைக்கு அடிமையானவர் போன்ற ஒருவரை மறுவாழ்வுக்காக அனுப்ப வேண்டும் என்றால், நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும்.
இப்போது போதைக்கு அடிமையானவர்களின் சில பெற்றோரும் உறவினர்களும் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில் இது அவர்களின் குடும்பத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துவதைப் போன்றதாகும்.
இப்போது நீதிமன்ற உத்தரவு இல்லாதவரை நாங்கள் யாரையும் புனர்வாழ்விற்காக அழைத்துச் செல்ல எந்த ஏற்பாடும் இல்லை.
இப்போது நாம் இன்னும் தன்னார்வ புனர்வாழ்வை எளிதாக்க வேண்டும். நான் அமைச்சராவதற்கு முன், இச்சட்டமூலம் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்கள் சட்டமூலத்தை உருவாக்கும் போது காலிமுகத்திடலைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை என்று நினைக்கிறேன். இது மக்களை வழிதவறிச் சென்றவர்களை நல்ல குடிமக்களாக மாற்றுவதற்கு மட்டுமே.
இப்போது அது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. நாங்கள் எதையும் வலுக்கட்டாயமாக செய்ய விரும்பவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். கட்டமைப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.