தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெ.,தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், ஜெ.,உட்பட நான்கு பேர் மீது தவறு இல்லை என நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.
அதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரபட்ட மேல் முறையீடு வழக்கின் விசாரணை முடிந்து இன்று (14ம் தேதி) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீர்ப்பு வரும் முன் தமிழக முதல்வர் பதவியில் அமரவேண்டும் என எம்.எல்.ஏக்களை கூவத்தூர் தீவு சொகுசு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார் சசிகலா.
தீர்ப்பு சசிகலாவிற்கு சாதகமாக வந்தால் அவரை கவர்னர் பதவியேற்க அழைக்க வாய்ப்புள்ளது. அதே வேளையில் தீர்ப்பு சசிக்கு பாதகமாக வந்தால் ஜெயில் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் தங்கி இருந்த சசிகலா நேற்று இரவு கூவத்தூர் தீவு சொகுசு ரிசார்ட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
அதே வேளையில், சசியின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இரண்டு அடியாட்கள் போன் மூலம் பேசி கொண்ட ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வந்தால் சசி ஆம்புலன்ஸ் மூலம் தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். மேலும் எம்.எல்.ஏக்கள் யாரும் தப்பி சென்று விடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் நேற்று (13ம் தேதி) மதுரை எம்.எல்.ஏ.,சரவணன் எப்படி மாறுவேடத்தில் தப்பி சென்றார் என்ற விசயத்தையும்,
தனியார் டி.வி.,நிருபர்கள் தாக்கப்பட்டதையும், இன்று தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வந்தால் உண்டாகவுள்ள கலவரம் குறித்தும் இந்த உரையாடலில் இடம் பெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.