Loading...
- தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.
- இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று சூப்பர்12 சுற்றில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்க இருந்தது. மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தது.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
Loading...
இந்நிலையில் குரூப் 1 புள்ளி பட்டியலில் அயர்லாந்து 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் ஒரு தோல்வி இரண்டு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
Loading...