மோட்டோராலா நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் பற்றி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
புது மோட்டோ X சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசரை லெனோவோ நிறுவன அதிகாரி வெளியிட்டு இருக்கிறார்.
மோட்டோரோலா நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனினை X சீரிஸ் பிராண்டிங்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் மோட்டோ X40 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரை லெனோவோ நிறுவன அதிகாரி வெளியிட்டு இருக்கிறார். டீசரில் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் X30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷாக மோட்டோ X40 அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே தகவலை உறுதிப்படுத்தும் வகையில் சீனாவின் 3சி வலைதளத்தில் XT2301-5 எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டது.
லெனோவோ மொபைல் வியாபார குழுதமத்திற்கான பொது மேலாளர் சென் ஜின் மோட்டோ X40 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெய்போவில் வெளியிட்டு இருக்கிறார். டீசருடன் புது ஸ்மார்ட்போனில் பயனர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார். இந்த X சீரிஸ் ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் ரக மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதன்படி புதிய மோட்டோ X40 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், FHD+ டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் 3சி வலைதளத்தில் இதே ஸ்மார்ட்போன் தான் XT2301-5 எனும் மாடல் நம்பருடன் பட்டியலிடப்பட்டதாக தெரிகிறது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.