சியோமி நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
மூன்று ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ரெட்மி பிராண்டிங்கில் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனம் சியோமி புக் ஏர் 13 மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சியோமி லேப்டாப், ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி புதிய ரெட்மி டிவி, ரெட்மி ப்ரோஜெக்டர், எலெக்ட்ரிக் ஹீட்டர் போன்ற சாதனங்களையும் சியோமி அறிமுகம் செய்தது.
புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. சியோமி புக் ஏர் 13 மாடலில் 13.3 இன்ச் 2880×1800 பிக்சல் E4 OLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன், VESA டிஸ்ப்ளே HDR500 சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 2-இன்-1 டிசைன் மற்றும் 360 டிகிரி ஹின்ஜ், டச் சப்போர்ட் உள்ளது.
இதனால் புதிய சியோமி புக் ஏர் 13 மாடலை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப்பில் 6-சீரிஸ் அலுமினியம் அலாய், CNC கார்விங் வழிமுறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை மற்றும் அளவு முறையே 1.2 கிலோ மற்றும் 12mm ஆகும்.
இந்த லேப்டாப்பில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி, டூயல் யூனிட் மைக்ரோபோன்கள், பேக்லிட் கீபோர்டு, கிளாஸ் டச்பேட், பவர் பட்டனில் கைரேகை சென்சார், 8MP கேமரா, 12th Gen இண்டெல் கோர் ஐ7 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் Xe GPU, அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இதில் 58.3 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய சியோமி புக் ஏர் 13 மாடல் விண்டோஸ் 11 ஒஎஸ், வைபை 6E, ப்ளூடூத் 5.2, இரண்டு தண்டர்போல்ட் 4 போர்ட்கள், ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
சீன சந்தையில் சியோமி புக் ஏர் 13 மாடலின் விலை RMB 4999, இந்திய மதிப்பில் ரூ. 56 ஆயிரத்து 925 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த லேப்டாப் வைட் நிறத்தில் கிடைக்கிறது.