Loading...
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் படி வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
Loading...
அதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
Loading...