- இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
- வருடாந்திர அடிப்படையில் ஐபோன் விற்பனை உலகளவில் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.
ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்திய ஐபோன் விற்பனையில் வரலாறு காணாத வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் ஐபோன் விற்பனை இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உலகளவில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 90.1 மில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டி இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது எட்டு சதவீதம் வரை அதிகம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 394.3 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட எட்டு சதவீதம் அதிகம் ஆகும்.
“ஒவ்வொரு பகுதி வருவாயிலும் நாங்கள் புதிய சாதனையை இந்த காலாண்டில் எட்டியிருக்கிறோம். இந்தியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற வளரும் நாடுகளில் தொடர்ந்து இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறோம்,” என ஆப்பிள் நிறுவனத்தில் கால் தெரிவித்தார்.
“புதிய ஐபோன் 14 சீரிஸ் பல்வேறு தலைசிறந்த தொழில்நுட்பம் மற்றும் மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தியை மேற்கொள்வதில் சுவாரஸ்ய அனுபவத்தை வழங்குகிறது,” என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய ஐபோன் 14 உற்பத்தி சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் நடைபெற்று வருகிறது.