கடந்த ஜனவரி மாதம் முதல் 28 திகதி வரையிலான காலப்பகுதியில் மத்திய மாகாணத்தில் இலையான் கடிக்கு 24 பேர் இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈ கடியினால் ஏற்பட்ட தோல் நோய் குணமாகாமல் உள்ள நோயாளிகள் நோய் பரவும் தன்மை கொண்டதால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லிஸ்பானியர் என்ற புதிய தோல் நோய் ஈ கடியினால் ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு ஈ கடியினால் ஏற்பட்ட தோல் நோய் குணமாகாமல் உள்ள நோயாளிகள் உடன் தகுந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களிடையே பரவும் தன்மை கொண்ட இந்த நோய் குணப்படுத்தக்கூடிய நோய் என்பதனால் உடனே சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.