ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மக்காச்சோளம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணும் தானிய வகையாகும்.
நார்ச்சத்து நிறைந்த மக்காச்சோளத்தில் சத்துக்கள் அதிகமாகவே இருக்கின்றது. இதனை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் குறித்த நார்ச்சத்து முழுமையாக நடக்கு கிடைக்கின்றது.
மக்காச் சோளத்தின் சத்துக்கள்
மக்காச்சோளத்தில் மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், வைட்டமின் பி சத்துக்கள் அதிகம் இருக்கின்றது.
குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பீட்டா கரோட்டீன், பெருலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட அமிலங்களும் உள்ளது.
இதனால் ரத்த சோகை வராமல் தடுப்பதுடன், மூல நோயிலிருந்து பாதுகாக்கின்றது.
மக்காச் சோளத்தின் நன்மைகள்
மக்காச் சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது.
வயிற்றின் செரிமான அமிலங்கள் சுரப்பினை சரிசெய்து நாம் உண்ணும் உணவுகளை எளிதில் ஜீரணமாக செய்கின்றது.
போலிக் அமிலம் அதிகமாக இருக்கும் மக்காச் சோளத்தினை கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும், கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கின்றது.
சீரான ரத்த ஓட்டத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதால், இதயநோய் வராமலும் தடுக்கின்றது. ரத்தசோகையையும் குணமாக்குகின்றது.
இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் கண்பார்வைத் திறனை தெளிவாகவும், கூர்மையாகவும் இருப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.
இன்சுலின் ஹார்மோன் சுரப்பை சீராக வைத்து சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைப்பதுடன் சிறந்த தீர்வும் கொடுக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மக்காச் சோளத்தினை தாரளமாக எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி மக்காச் சோளத்தினை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருக்கும்.