ஆப்பிள் நிறுவனம் விரைவில் புது மேக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டு துவக்கத்தில் புது சாதனங்களை அறிமுகம் செய்வதை ஆப்பிள் அரிதாக மேற்கொள்ளும் நடவடிக்கை ஆகும்.
ஆப்பிள் நிறுவனம் புதிதாக மேக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புது மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய செய்தி குறிப்பில், அடுத்த தலைமுறை ஆப்பிள் மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கம் வரை அறிமுகம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக விடுமுறை காலக்கட்டத்திற்காக ஆப்பிள் மேலும் சில சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத வாக்கில் புது சாதனங்களை ஆப்பிள் மிகவும் அரிதாகவே அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் புது மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். ஒவ்வொரு முறையும் மார்ச் மாதத்தில் மேக் மாடல்களை ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் மேக் ஸ்டூடியோ மாடலை அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் M2 சார்ந்த 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள், மேக்ஒஎஸ் 13.3 மற்றும் ஐஒஎஸ் 16.3 அப்டேட்டுடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மென்பொருள் அப்டேட்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ வெளியிடப்படலாம்.
முன்னதாக ஆப்பிள் வருவாய் விளக்க கூட்டத்தில் விடுமுறை காலத்தை ஒட்டி சில சானங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்தும் தகவல்களை ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்து இருந்தார். மேலும் புது மேக் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கம் வரை அறிமுகம் செய்யப்படாது என்றே தகவல் வெளியாகி உள்ளது.