காஜல் அகர்வாலுக்கு அந்த பர்டிகுலர் பெர்சனை பத்தி கேட்டால், பயங்கர படபடப்பை உண்டு பண்ணிவிடுகிறதாம். அப்படியென்ன டென்ஷன் ?
இயக்குனர் தேஜாவோட படத்தில் 10 வருசத்துக்கு அப்புறம் நடிக்கப்போகிறாராம். தேஜாவின் லக்ஷ்மி கல்யாணம் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். இப்போ காஜல் ஒரு முன்னணி ஹீரோயின். ஆனாலும், தேஜாவின் படத்தில் நடிக்க ஒரு டென்ஷனாக இருக்காம்.
நேனே ராஜு நேனே மந்திரி என்ற அந்த படத்தின் ஹீரோ ராணா. இந்த படத்தில் காஜல் இல்லாமல், கேத்ரீன் தெரஸாவும் நடிக்க உள்ளார்.
கைவசம் அதிக படங்களை வைத்துள்ளார் காஜல். தமிழில் அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் அவரின் 61 வது படம் என்று தமிழில் பெரிய படங்கள். இப்போது சிரஞ்சீவியுடன் நடித்து, அந்த படம் சூப்பர் ஹிட்டாகி, தெலுங்கிலும் அம்மணி மவுசு ஏறிபோய் உள்ளது.