லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விலை மாற்றம்
ஊடகமொன்றிற்கு நேற்று(01.11.2022) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“எதிர்காலத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை உறுதியாக கூற முடியாது. இருப்பினும் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு நாளொன்றுக்கு சுமார் 40,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு
விலை மாற்றம் ஏற்பட்டாலும் எரிவாயு விநியோக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இருப்பினும் கையிருப்பில் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டாலும் சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகவும் விலை திருத்தம் செய்யப்படும் வரை எரிவாயு சிலிண்டர்களை சில விநியோகஸ்தர்கள் மறைப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.”என கூறியுள்ளார்.