Loading...
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் – உப்புமடம் சந்தியடியில் நேற்று(01.11.2022)இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியில் நடந்து சென்ற முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் மோதியுள்ளார். இதில் காயமடைந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கை
இந்நிலையில் நேற்று மாலை குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Loading...
இந்த விபத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த எஸ்.விக்கினேஸ்வரன் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய பெண்ணினை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...