தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளவர் யுவன் சங்கர் ராஜா.
யுவன் தற்போது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு ‘உம்ரா’ என்ற புனித பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.
சரத்குமார் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதன்பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் இவரின் இசை கூடுதல் பலமாக அமைந்தது.
2015ல் ஆடை வடிவமைப்பாளர் ஷஃப்ரூன் நிஷா என்பவரை யுவன் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஸியா என்ற மகள் உள்ளார். 2014ல் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டதாக அறிவித்த யுவன், தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு ‘உம்ரா’ என்ற புனித பயணத்தை யுவன் மேற்கொண்டு உள்ளார். யுவன் உம்ராவுக்கான ஆடை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.