- மேக்ஸ் ஓட்வாட், டாம் கூப்பர் இணை அருமையாக ஆடி ரன்களை சேகரித்தனர்.
- இறுதியில் அந்த அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இந்தப்போட்டிக்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ராசா 40 ரன்னும், வில்லியம்ஸ் 28 ரன்னும் எடுத்தனர். அந்த அணியில் சிக்கந்தர் ராசா, சீன் வில்ல்லியம்சை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பால் வான் மீகெரென் 3 விக்கெட்டும், பிரண்டன் கிளெவர், லீடெ, வான் பீக் தலா 2 விக்கெட்டும், கிளாசென் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக ஸ்டீபன், மேக்ஸ் ஓட்வாட் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் ஸ்டீபன் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து டாம் கூப்பர் களம் இறங்கினார்.
மேக்ஸ் ஓட்வாட், டாம் கூப்பர் இணை அருமையாக ஆடி ரன்களை சேகரித்தனர். இதில் டாம் கூப்பர் 32 ரன்னுக்கும், மேக்ஸ் ஓட்வாட் 52 ரன்னும் அடித்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய காலின் 1 ரன்னுக்கும், எட்வர்ட்ஸ் 5 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இறுதியில் அந்த அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் மேக்ஸ் ஓட்வாட் 52 ரன்கள் அடித்தார்.