இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் தற்போது ‘நான் கடவுள் இல்லை’ படத்தை இயக்கி வருகிறார்.
இவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் 1981-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவரின் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் இயக்கத்தில் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இமயமலையில் மோட்டார் சைக்கிளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள் நடிகர் விஜய்யை விட மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.