- விரதத்தில் பல விதிகள் உள்ளன.
- விரதம் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் சடங்குகளின்படி விரதம் மேற்கொள்கின்றனர். நாட்கள், சிறப்பு நாள் விருந்துகள் உட்பட மற்ற நேரங்களில் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தில் பல விதிகள் உள்ளன. விரதம் இருப்பது அறிவியல் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பார்க்கப்படுகிறது. உண்ணாவிரதத்தின் போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளாவிட்டால், விரதம் தோல்வியடையும். எனவே நோன்பு நோற்கும்போது மனதில் கொள்ள வேண்டியவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க…
விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோவில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளுதல் நன்று. உரிய நேரத்தில் சமைத்து சாப்பிடுதல் வேண்டும்.
குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்குப் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் கடைப்பிடிக்கலாம். குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால், அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நோயாளிகள், பாலகர்களும், மாதவிலக்கான பெண்களும் விரதம் அனுஷ்டிக்கக்கூடாது. பெண்கள் மாத விலக்காகி ஏழு தினங்கள் ஆன பின்பே விரதம் மேற்கொள்ளலாம்.
விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது.
விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல், பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூட தவறாகும். வெற்றிலை பாக்கு போடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் ஆகியவையும் கூடாது.மேலும் விரதத்தை கொண்டாடும் போது முன்னோர்களை கடவுளுடன் நினைவு கூற வேண்டும்.
விரதம் அனுஷ்டிக்கும் போது மௌன விரதம் இருப்பது மிகவும் நல்லது. விரதம் இருக்கும் போது கடவுளின் பெயரையோ, ஸ்லோகங்களை உச்சரித்துக் கொண்டே இருப்பது மிகவும் நல்லது.