பண மோசடி
நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியிடம் பண மோசடி செய்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சுற்றுலாப்பயணியிடம் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கொழும்பு நகரைச் சுற்றி வர 20 டொலர் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஒரு டொலர் 4,500 ரூபா என்றும், அந்தத் தொகையை இலங்கை ரூபாவாகத் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒன்றரை இலட்சம் ரூபாவை சுற்றுலாப்பயணி வங்கி அட்டை மூலம் பெற்று அவரிடம் கொடுத்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
பின்னர் இது தொடர்பில் சுற்றுலாப்பயணி காவல்துறையினரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சுற்றுலா வழிகாட்டியை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.