- இயக்குனர் யுவன் இயக்கத்தில் நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் படம் ‘ஓ மை கோஸ்ட்’.
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.
இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பேசியதாவது, “இந்த படத்தின் கதையை இயக்குனர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன்.
சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க நபர், அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம். ஆனால் அவர் இலகுவாக மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று பேசினார்.