இயக்குனர் கவுதமன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இயக்குனர் கவுதமன் ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார்.
இந்நிலையில், இந்த படத்திற்காக பாடலமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கவுதமன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “ஜி.வி.பிரகாஷ் வீடு கெளதமன் படத்துக்குப் பாட்டுக் கட்டுகிறோம். மகிழ்ச்சியின் இழைகளில் நெய்யப்படுகிறது பாட்டு வஞ்சிக்கொடியே வாடி – நீ வளத்த பொருளத் தாடி பாசத்த உள்ளவச்சுப் பாசாங்க வெளியவச்சு வேசங்கட்டி வந்தவளே வெறும்வாய மெல்லுறியே பத்தே நிமிடத்தில் பாட்டு பிரமாதம் பிரகாஷ்! ” என்று பதிவிட்டுள்ளார்.