தான் வகிக்கும் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்வது குறித்து சிந்தித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கமானது நாட்டின் அவசியமான மாற்றங்களுக்காக குரல் எழுப்பி வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
நாடாக முன்னோக்கி செல்வதற்கு அதுவே சிறந்த வழி என கருதுகின்றேன். நான் எனது அரசியல் வாழ்க்கையிலிருந்து விடைபெற்று தேசிய இயக்கத்தில் இணைய விரும்புகின்றேன் எனவும் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலின் முழு கருத்தும் பிழையானது. இது இனம், மதம் என பிளவுபட்டுள்ளது. நாங்கள் பிளவுபட்டிருக்கின்றோம்.
சுயநலம் மிக்க சஜித் பிரேமதாச
மேலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசா சுயநலம் மிக்கவராக காணப்படுகின்றார். அவருடன் இணைந்து பயணிப்பது குறித்து எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை. நபர்களின் முகங்களை மாற்றிக்கொண்டு இருக்காது, கட்டமைப்பு முறையை மாற்றுவதே அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.