அர்ஜுன் தாஸ் தற்போது இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அநீதி படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியாகி வைரலானது.
‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தத இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ‘அநீதி’ படத்தில் நடித்து வருகிறார்.
இதில் இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, அர்ஜுன் தாஸ், ‘மெளனகுரு’, ‘மகாமுனி’ போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.