பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆங்கிலத்தில் ஒன்றையும் சிங்களத்தில் மற்றொன்றையும் கூறுகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செவனல பிரதேசத்தில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாடு சென்று ஹம்பாந்தோட்டையில் சிறந்த துறைமுகம் காணப்படுவதாக கூறுகின்றார்.
நாடு திரும்பியதும் சிங்களமொழியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அவர் நீச்சல் தடாகம் என சித்தரிக்கின்றார்
நாம் எமது காலத்தில் மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பாதுகாத்த சொத்துக்களை இந்த அரசாங்கம் விற்பனை செய்கின்றது.
எவ்வளவு சாப்பிட இல்லாத போதிலும் நாம் நாட்டின் சொத்துக்களை விற்று சாப்பிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.