“பொதுவாகவே இரவை விட பகலுக்கு தான் அதிக விழிகள் இருக்கிறது என்று நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ‘இரவுக்கு’ தான் ‘ஆயிரம்’ ‘கண்கள்’ இருக்கின்றது. படத்திற்கும், இரவுக்கும், இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதால், இந்த படத்திற்கு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பது தான் இந்த படத்தின் ஒரு வரி கதை. ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ எடுக்கப்பட உள்ளது.
வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், படத்தில் பணியாற்ற நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்ற தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.