- இந்தியாவில் ஏராளமான வகைகளில் வாஷிங் மெஷின் கடைகளில் கிடைக்கின்றன.
- ஆடையில் உள்ள அழுக்கை நீக்க வாஷிங் மெஷின் முழுவதுமாக குறைத்து விட்டன.
ஆள் பாதை ஆடை பாதி என்பார்கள். நாம் உடுத்தும் ஆடை பொறுத்து நமக்கு சிறப்பு உண்டு. ஆடையின் சிறப்பு என்ன என்பதை நம் அனுபவத்தில் அறிந்திருப்போம். ஆடையில் உள்ள அழுக்கை நீக்க நாம் செலவு செய்யும் காலத்தை இன்று வாஷிங் மெஷின் முழுவதுமாக குறைத்து விட்டன. இந்தியாவில் ஏராளமான வகைகளில் வாஷிங் மெஷின் கடைகளில் கிடைக்கின்றன. பலவகையான சேவைகளை தருகின்றன. இதில் எதை வாங்குவது? நம் தேவைக்கு எது பொருந்தும்? போன்றதகவல்களை காண்போம்.
பொதுவாக வாஷிங் மெஷின் எத்தனை கிலோ துணிகளை துவைக்கின்றதோ அதை பொறுத்து அதன் அளவு தீர்மானிக்கப்படுகிறது. உதாரணம் 6 கிலோ, 8கிலோ என்ற வகையில் உங்கள் தேவைக்கு ஏற்ப ஒன்றை தேர்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தது வாஷிங் மெஷினில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று ஆட்டோமேட்டிக் மற்றொன்று மேனுவல். ஆட்டோமேட்டிக் மெஷின் என்பது துணிகளை போட்டதும் அதுவே துவைத்து நன்றாக பிழிந்து உலர்த்தி வெளியில் தள்ளிவிடும். மேனுவல் வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்து ஈரத்ததோடு கொடுக்கும் நீங்கள் அவற்றை கைகளில் எடுத்து பிழிந்து, உலர்த்தும் மற்றொரு தொட்டியில் போடா வேண்டும். இது தான் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் இரண்டுக்கும் உள்ள வித்யாசம்.
இந்த இரண்டு பிரிவுகளில் பல வகைகளில் உள்ளன. அவை ஃபிரண்ட் லோடிங், டாப் லோடிங் ட்வின்-டப் அல்லது புல் ஆட்டோமேட்டிக் ஆகும். இவற்றின் நன்மை தீமைகளை அதாவது செலவாகும் தண்ணீர், மின்சாரம் மற்றும் துவைக்க எடுத்துக் கொள்ளும் நேரம் பற்றி தெரிந்து கொண்டால் எதை வாங்குவது என்பதில் தெளிவாக இருக்கலாம்.
பிரண்ட் லோடிங் மற்றும் டாப் லோடிங் வாஷிங் மெஷின் – நன்மைகள் மற்றும் தீமைகள்.
பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் என்பது துணிகளை மெஷினின் முன் பாகத்தின் வழியாக மெஷினுக்குள் அனுப்புவது. டாப் லோடிங் வாஷிங் மெஷின் என்பது துணிகளை மெஷினின் மேல் பக்கத்தின் வழியாக மெஷினுக்குள் அனுப்புவது. பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் மிக சிறப்பாக கைகளில் துவைப்பது போன்று துவைக்கும். இதில் துணிகளை மேலும் கீழுமாக புரட்டுவது கைகளில் துவைப்பது போன்றே இருக்கும். துணிகள் சிக்கிக் கொள்ளாது. துணிகள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும். ஆனால் டாப் லோடிங் மெஷினில் உள்ள சென்ட்ரல் டர்பின் பிளேடுகள் தொடர்ந்து திசைகளை மாற்றி சுழன்று துணிகளை தேய்ப்பதால், துணிகள் விரைவில் பாழாகிவிடும். மேலும் துணிகள் சிக்கிக் கொள்ளும்.
பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினில் துணிகளை உலர வைப்பதற்கு உள்ள ஸ்பின் பிளேடுகள் மிக அதிக வேகத்தில் சுழன்று துணிகளை உலர வைப்பதால் துணிகள் ஈரம் இல்லாமல் இருக்கும் விரைவாக காய்ந்துவிடும். மேலும் இதற்கு குறைந்த அளவு தண்ணீர் மற்றும் சோப் தூள் செலவாகும். இறுதியாக இது இயங்கும் போது ஓசை உண்டாக்காது அமைதியாக இருக்கும். ஆனால் டாப் லோடிங் வாஷிங் மெஷின் மிகுந்த ஓசையை உண்டாக்கும். டாப் லோடிங் வாஷிங் மெஷன் நிறைய தண்ணீர் செலவழிக்கும். பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினில் உள்ள ஒரே குறைபாடு டாப் லோடிங் வாஷிங் மெஷினை விட இதன் விலை அதிகம்.
ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் இவற்றின் நன்மை தீமைகள். பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் ஆட்டோமேட்டிக் மெஷினாக தான் கிடைக்கும். இதில் பல அம்சங்கள் உண்டு. உதாரணம் ஸ்பின் வேகம், டெம்பரேச்சர் செட்டிங். இதன் விலையும் ஸ்பின் வேகத்தை பொறுத்து வேறுபடும்.
மேனுவல் வாஷிங் மெஷின் டாப் லோடிங் மெஷினாகத் தான் கிடைக்கும். மேனுவல் வாஷிங் மெஷின் இரண்டு டப்புகளை கொண்டது. ஒரு டப்பில் துணிகளை துவைக்க வேண்டும், துவைத்த துணிகளை கைகளில் எடுத்து மற்றோரு டப்பில் போட்டு உலர்த்த வேண்டும். இதில் உள்ள ஸ்பின் பிளேடுகள் மெல்லியதாக இருப்பதால் எவ்வளவு வேகமாக சுழன்றாலும் துணிகளில் உள்ள ஈரத்தை முழுவதும் நீக்காது.
நாம் முன்பே பார்த்தோம் வாஷிங் மெஷின் அளவு 6 கிலோ, 8 கிலோ என துணியின் எடை பொறுத்து தீர்மானிக்கப் படுகிறது. 6 கிலோ எடை உள்ள பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினில் 2 துணிகளை போட்டு துவைத்தால், துணியை உலர்த்தும் பொது ஸ்பின் ப்ளேடு அதி வேகத்தில் சுழல்வதால் மெஷின் அதிர ஆரம்பிக்கும். பெரும்பாலான நவீன பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினில் அதிர்வை கண்காணிக்கும் சென்சார் பொருத்தப் பட்டிருக்கும்.
வாஷிங் மெஷினின் செலவுகள்
6 கிலோ எடை உள்ள வாஷிங் மெஷினுக்கு 25 – 35 லிட்டர் தண்ணீர் செலவாகும். அடுத்தது மின்சாரம். வாஷிங் மெஷினில் உள்ள நீரை சூடாக்க மின்சாரம் தேவைப்படும். துணி துவைக்க செட் செய்யும் டேம்பேர்ச்சர் பொறுத்து மின்சாரத்தின் தேவை இருக்கும். நீங்கள் மின்சாரத்தை சேமிக்க நினைத்தால் 40 டிகிரி c யில் வைத்து துணி துவையுங்கள். பொதுவாக பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷினுக்கு மற்ற எல்லா வாஷிங் மெஷின்களுக்கு தேவைப் படும் மின்சாரத்தை விட குறைவாக தேவைப்படும்.
வாஷிங் மெஷினுடன் ட்ரயர் – நன்மை தீமை
வாஷிங் மெஷினுடன் ட்ரயர் என்பது துவைப்பது மற்றும் உணர்த்துவது என இரண்டும் ஒன்றாக கொண்ட முழுமையான ஆட்டோமேட்டிக் மெஷின் ஆகும். இதற்கு பெரிய இடம் தேவைப் படாது. வாஷிங் மெஷினுடன் ட்ரயர் கொண்ட மெஷினில் துணிகளை போட்டு, தேவையான சோப் தூள் சேர்த்து ஆன் செய்தல் போதும் சில மணி நேரத்தில் உங்கள் துணி தூய்மையாக வெளியே வரும். நீங்கள் துணி துவைத்த பின் அந்த ஈரத்துணியை உலர்த்த வேறொரு டப்புக்கு மாற்ற வேண்டிய தேவை இல்லை.
மேலே சொன்ன கருத்துக்களை மனதில் வைத்து, உங்களுக்கு பொருத்தமான வாஷிங் மெஷினை தேர்வு செய்யலாம்.