பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும் நாள். பாராட்டும் புகழும் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
தொல்லை தந்தவர்கள் எல்லையைவிட்டு விலகிச் செல்லும் நாள்.தொழில் போட்டிகள் அகலும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். சொத்துக்களால் லாபம் உண்டு.
சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். சுற்றுப் பயணத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர்களின் மீது பிரியம் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வியாபார விருத்தியுண்டு.
இடம் வாங்கும் முயற்சியில் ஈடுபடும் நாள். உடன் பிறப்புகளால் உற்சாகம் அதிகரிக்கும். வியாபார முன்னேற்றம் கருதி நண்பர்களைச் சந்திக்க நேரிடும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும்.
நிதி நிலை உயரும் நாள். பிரியமான சிலரைத் தேடிச் சென்று சந்திப்பீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும்.
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. கை மாற்றாகக் கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும்.
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உற்றார், உறவினர்களின் வருகையால் செலவு அதிகரிக்கும்.
வருமானம் திருப்தி தரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறலாம். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
நினைத்ததை செய்து முடிக்கும் நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை வந்து சேரும்.
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தந்தை வழியில் பணவரவுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.
வழிபாட்டின் மூலம் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும் நாள். நீண்ட நாட்களாக இருந்த நட்பு பகையாகலாம். பயணங்களும் அலைச்சல்களும் அதிகரிக்கும்.
நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். பிரியமாகச் சிலர் கேட்டதை வாங்கிக் கொடுக்கச் செலவிடுவீர்கள். நீண்டதூரப் பயணங்கள் செல்வதில் நாட்டம் செல்லும். புதியவர்களின் நட்பு கிடைக்கும்.