Loading...
சென்னையை அடுத்த கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் சசிகலாவும் கடந்த 2 நாட்கள் தங்கியிருந்து எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று காலை 10.30 மணியளவில் உச்சநீதிமன்றம் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.
இதனையடுத்து சசிகலா நேற்று இரவு கூவத்தூரில் இருந்து போயஸ்கார்டன் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசியதாவது:
Loading...
எனக்கு தற்போது நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தற்காலிக பிரச்சனை மட்டும்தான் எனவே அதனை விரைவில் சமாளிக்க என்னால் முடியும். சிங்கத்தை எந்த கூண்டில் அடைத்தாலும் வெளியே வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
Loading...