- ஒப்போ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
- முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஒப்போ நிறுவனம் 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அறிமுகம் செய்து இருந்தது.
ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருந்தது. புதிய பாஸ்ட் சார்ஜிங் வசதியை ஒப்போ நிறுவனம் அடுத்த ஆண்டு சந்தைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ ரெனோ 9 சீரிஸ் மற்றும் ஒப்போ ஃபைண்ட் X6 சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் எந்த ஸ்மார்ட்போன்களில் இத்தகைய பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
டிப்ஸ்டரான அபிஷேக் யாதவ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஒப்போ நிறுவனம் 240 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. முன்னதாக இந்த தொழில்நுட்பத்தை ஒப்போ இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த தொழில்நுட்பம் கொண்டு 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.
முற்றிலும் புதிய 240 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி எந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒப்போ ரெனோ 9 சீரிசில் – வென்னிலா ஒப்போ ரெனோ 9, ஒப்போ ரெனோ 9 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ரெனோ 9 ப்ரோ பிளஸ் மாடலில் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 32MP செல்பி கேமரா, 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.