அமைச்சர் திரான் அலஸை திட்டியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 5 இல் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அமைச்சர் மருந்து எடுப்பதற்காக வந்திருந்த இடத்தில் வியாழக்கிழமை (3) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் வைத்தியசாலையில் சம்பவம்
அமைச்சரைக் கண்டதும் சந்தேக நபர் அவரை திட்ட ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அந்த இடத்தில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நாரஹேன்பிட்டி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, காவல்துறை குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சந்தேக நபர் கொழும்பு 5, அந்தரவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் நாரஹேன்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.