Loading...
இன்று மாலை சென்னை வருமாறு அனைத்து திமுக எம்எல்ஏக்களும் திமுக மேலிடத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிது.
கோவைக்கு சென்றிருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்காக சென்னை திரும்புகிறார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையால் தற்போது காபந்து முதல்வராக பன்னீர்செல்வம் நீடிக்கிறார். அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்று ஆளுநரிடம் கடதம் கொடுத்துள்ளார். ஆளுநரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.
திடீரென நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால், திமுக எடுக்க வேண்டிய நிலைபாடு குறித்து ஆலோசிக்க இந்த அவசர கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
Loading...