Loading...
அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்திருந்தாலும், உண்மையான அரசியல் மாற்றம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முழு நாட்டுக்கும் எதிர்வினையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
Loading...
மேலும் நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் தவறான பொருளாதார கொள்கை மற்றும் அரசியல் கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை நாம் சந்திக்கொண்டு வருகின்றோம் என்றும் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார். (நன்றி கேசரி)
Loading...