‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் ரிலீசாக தயாராக உள்ளது. இப்படத்தில் ஆர்யா முதன்முறையாக காட்டுவாசியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களின் காடுகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீனா தெரசா நடித்துள்ளார்.
படத்தின் படப்படிப்பிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் முடிந்துள்ள நிலையில், தற்போது, படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரவமாக நடைபெற்று வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் புத்தாண்டு அன்று ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஒருவாரத்திற்கு முன்னதாக ஏப்ரல் 7-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.