தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இவருக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த வருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்.