தனது அன்பான கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை அருகே சென்று பார்த்து விட்டதால் அந்த ரசிகர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
இந்தியா மோதும் ஆட்டங்களில் அரங்கம் நிரம்பி வழிகிறது.
20 ஓவர் உலக கோப்பையில் ‘சூப்பர்12’ சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை தோற்கடித்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 25 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), லோகேஷ் ராகுல் 35 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவரில் 115 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப்சிங், அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த போட்டியின் போது இளம் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17-வது ஓவரில் இந்திய வீரர்கள் மைதானத்தில் பீல்டிங்கில் இருந்தனர். அப்போது கருப்பு சட்டை அணிந்த சிறுவன் ஒருவன் தேசிய கொடியுடன் ரோகித் சர்மாவை பார்ப்பதற்காக ஆடுகளத்துக்குள் பாதுகாப்பையும் மீறி நுழைந்தான்.
போலீசார் அவனை பிடிப்பதற்குள் அவன் பிட்ச் பகுதி அருகே வந்தான். பின்னால் துரத்தி வந்த ஆஸ்திரேலிய போலீசார் அந்த ரசிகரை மடக்கி பிடித்தனர். அப்போது ரோகித் சர்மா அருகே வந்து அந்த ரசிகரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். தனது அன்பான கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை அருகே சென்று பார்த்து விட்டதால் அந்த ரசிகர் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
பின்னர் அந்த சிறுவனை போலீசார் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.
மெல்போர்ன் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ரோகித் சர்மா ரசிகருக்கு ரூ.6½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய அணிக்கு அங்குள்ள இந்திய ரசிகர்கள் பெரும் அளவில் திரண்டு வந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்தியா மோதும் ஆட்டங்களில் அரங்கம் நிரம்பி வழிகிறது.