- அரைஇறுதியில் இங்கிலாந்தை அடிலெய்டில் சந்திக்க உள்ளோம்.
- இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவதை வெளியில் இருந்து பார்க்கும்போது வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நெருக்கடி தணிந்து விடுகிறது.
வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் இது ஒரு முழுமையான ஆல்ரவுண்ட் செயல்பாடு. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் களம் இறங்கி விரும்பிய மாதிரி விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.
அதை செய்து இருக்கிறோம். சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதம். அவர் இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவதை வெளியில் இருந்து பார்க்கும்போது வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் நெருக்கடி தணிந்து விடுகிறது. அத்துடன் எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேனின் அழுத்தத்தையும் அவர் குறைந்து விடுகிறார்.
அரைஇறுதியில் இங்கிலாந்தை அடிலெய்டில் சந்திக்க உள்ளோம். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப எங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்வது முக்கியமாகும்.
ஏற்கனவே அங்கு நாங்கள் விளையாடி இருக்கிறோம். ஆனாலும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது அவசியமாகும். இங்கிலாந்து நல்ல அணி. இது சிறந்த போட்டியாக இருக்கும்’ என்றார்.