அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் பெற்றுள்ள இலங்கையர் எவ்வித பயமும் இன்றி நாடு திரும்பமுடியும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள அவர், அந்த நாட்டின் பிரதமர் மல்கம் டேன்புல்லுடன் சந்திப்பை நடத்திய பின்னர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையின் சட்டங்களை மீறி அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களுக்கு எதிராகவும் அவர்கள் நாடு திரும்பும்போது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துகோரமுடியாத நிலையில் ஐக்கிய அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்களும் நாடு திரும்பலாம் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்று வாழ்வதற்குரிய பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவினால் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு மானுஸ் மற்றும் நாவுறு தீவுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள 1250பேரே ஐக்கிய அமரிக்காவினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.